12 மார்., 2009

ஒரு தென்றலின் குரல்....

யாவரும் நலமாய் இருப்பீர்கள் என்றே எண்ணுகிறேன்...

உங்களோடு நான் இப்படி பேசி நாட்கள் பலவாகிறது....

நிச்சயம் என்னை மறந்து இருக்க மாட்டீர்கள்..

நான் உங்கள் நட்பின் உயிரால் மட்டுமே உலகில் உலா வருகிறேன்...

நான் உங்களோடு இருக்கும் போது உங்களுக்கு குளுமை தரா விட்டாலும் வெம்மை தராமல் இருந்துதிருந்தேன்...

என்னை நீங்கள் மறந்து இருக்க மாட்டீர்கள்..

ஏனென்றால் நான் உங்களுக்கு பிடித்த நண்பன் என்பது என் எண்ணம்...

இப்போதெல்லாம் நீங்கள் என்னை விட்டு வெகுதூரம் சென்று விடுகிறீர்கள்...

நான் நினைத்தாலும் உங்களை எட்ட முடியாத தூரம்...

நான் உங்களை பிரிந்து வாடுகிறேன் என்றால் அது எப்படி பொய்யாகும்...

இப்போதெல்லாம் நீங்கள் என்னை விட்டு வெகுதூரம் சென்று விடுகிறீர்கள்...

நான் உங்கள் அருகாமையில் இருக்க

மலைகளை கடக்க வேண்டாம்...

கடல்களை கடக்க வேண்டாம்...

சில மரங்களை கடந்தால் போதும்...

நீங்கள் என்னை அழைப்பது கூட எனக்கு கேட்கிறது....

நான் வருவதில்லை என்று புலம்புவது கூட என்னால் கேட்க முடிகிறது...

நான் ஆர்வமுடன் புறப்படுகிறேன்..

ஆனால் என் பயணம் ஏனோ தடைபடுகிறது....

நான் 'சோர்ந்து' விழுந்துவிடுகிறேன்...

எல்லோரும் என்னை திட்டி, சிலர் என்னையே மறந்தும் விடுகிறுறீர்கள்....

சிலர் மட்டும் என் காதில் சொல்லுகிறார்கள்...

" நான் வாடையாய் உருக்கொள்ள நீங்களும் காரணமாம்!"

1 கருத்து: