31 மார்., 2009

முட்டாள் தினம்...

சிலரின் மௌனம் நம்மை முட்டாளாக்கும்...
சிலரின் பேச்சு நம்மை முட்டாளாக்கும்...
சில நேரம் சிரிப்பு கூட நம்மை முட்டாளாக்கும்...
பல நேரம் அழுகை கூட நம்மை முட்டாளாக்கும்.....
குழந்தையின் மழலை கூட நம்மை முட்டாளாக்கும்.....


" எப்படியோ எல்லோரும் இன்றைய தினத்தை
எதிர்பார்த்துதான் இருக்கிறோம்...
கொண்டாட அல்ல!"


"மற்றவர்களை முட்டாளாக்க..."

அன்புடன்
சிவக்குமார் நேதாஜி

தயவு செய்து மரங்களை வாழவிடுங்கள்... இன்றேல் எதிர் காலத்தில் தென்றலின் அர்த்தத்தை அகராதியில் தேட வேண்டிஇருக்கும்....

13 மார்., 2009

இதயம்

துடிக்கும் போது யாரும் கவனிக்கமாட்டார்கள்
நின்று விட்டால் பலரும் துடிப்பார்கள்

12 மார்., 2009

ஆனந்த கண்ணீர்

நான்
சிந்தும் கண்ணீர்
பலருக்கு
ஆனந்த கண்ணீர்
அன்புடன் பேனா

இவண்
பிரபாகரன் .சி

குடகு மலையால்

காலங்கள் பல கண்ட
காவிரியே - நீ
குடகு மலையில் பிறந்தாய்
கல்லைத்தான் முத்தமிட்டாய்
கரைந்து விட்டது...
பாறை போன்ற மலைகளை என்ன செய்தாய்
பாதையாக்கி கொண்டாய்
உன்னை தடுக்க
கல்லாலே அணை கட்டினோம்
கல்லணையில் -அனாலும்
கடலை அடைந்தாயே..
அரசியலையும் ஆட்டி வைத்தவளே...
ஆடி 18 அன்று காட்சிதந்தவளே...
அட உழவனின்
வயிறும், வயலும் வாடுது...
வந்து விடு வரும் வருடம்
எதிர்பார்ப்பேன்
வாடகை கலப்பையுடனும்
வறண்ட நிலத்துடனும்
இவண்
வறண்ட நிலத்தில் ஒருவன்
சி.பிரபாகரன் M.Com., M.Phil.,
MUTHIYAMPALAYAM, TRICHY


வாழவிடுங்கள்...

தயவு செய்து மரங்களை வாழவிடுங்கள்...
இன்றேல் எதிர் காலத்தில்
தென்றலின் அர்த்தத்தை
அகராதியில் தேட வேண்டிஇருக்கும்....

ஒரு தென்றலின் குரல்....

யாவரும் நலமாய் இருப்பீர்கள் என்றே எண்ணுகிறேன்...

உங்களோடு நான் இப்படி பேசி நாட்கள் பலவாகிறது....

நிச்சயம் என்னை மறந்து இருக்க மாட்டீர்கள்..

நான் உங்கள் நட்பின் உயிரால் மட்டுமே உலகில் உலா வருகிறேன்...

நான் உங்களோடு இருக்கும் போது உங்களுக்கு குளுமை தரா விட்டாலும் வெம்மை தராமல் இருந்துதிருந்தேன்...

என்னை நீங்கள் மறந்து இருக்க மாட்டீர்கள்..

ஏனென்றால் நான் உங்களுக்கு பிடித்த நண்பன் என்பது என் எண்ணம்...

இப்போதெல்லாம் நீங்கள் என்னை விட்டு வெகுதூரம் சென்று விடுகிறீர்கள்...

நான் நினைத்தாலும் உங்களை எட்ட முடியாத தூரம்...

நான் உங்களை பிரிந்து வாடுகிறேன் என்றால் அது எப்படி பொய்யாகும்...

இப்போதெல்லாம் நீங்கள் என்னை விட்டு வெகுதூரம் சென்று விடுகிறீர்கள்...

நான் உங்கள் அருகாமையில் இருக்க

மலைகளை கடக்க வேண்டாம்...

கடல்களை கடக்க வேண்டாம்...

சில மரங்களை கடந்தால் போதும்...

நீங்கள் என்னை அழைப்பது கூட எனக்கு கேட்கிறது....

நான் வருவதில்லை என்று புலம்புவது கூட என்னால் கேட்க முடிகிறது...

நான் ஆர்வமுடன் புறப்படுகிறேன்..

ஆனால் என் பயணம் ஏனோ தடைபடுகிறது....

நான் 'சோர்ந்து' விழுந்துவிடுகிறேன்...

எல்லோரும் என்னை திட்டி, சிலர் என்னையே மறந்தும் விடுகிறுறீர்கள்....

சிலர் மட்டும் என் காதில் சொல்லுகிறார்கள்...

" நான் வாடையாய் உருக்கொள்ள நீங்களும் காரணமாம்!"