17 ஏப்., 2009

மாற்றான் வீட்டு மரணம் இல்லை

மின்னஞ்சலில் இலங்கை தமிழ் படுகொலை படங்கள்....
பார்ப்பதற்கு கொடுரமாய் இருந்தன....
------------------------------------------------------------------------
அந்த மின்னஞ்சல்
கோபத்துடன், என்னை
தலை நாண செய்தது...
----------
"என் உடன்பிறப்புக்கள்
உயிருக்கு போராட
நானோ சுகபோகம்
தேடி அலைகிறேனே!",என்று
தலை நாணுகிறேன்...
***
"சூடானது ரத்தம் மட்டும்தான்!?
ஆனால்
'செயலற்ற தசையானது
என் இதயம்!'", என்று
தலை நாணுகிறேன்
***
"இருதுளி கண்ணீர் தவிர
வேறுயேதும் செய்ய இயலாத
'சவமாய்' இருக்கிறேன்", என்று
தலை நாணுகிறேன்...
***
"உப்பிட்டு 'உண்ணுதல்'
ஏதும் என்னுள் எந்த மாற்றம்
தரவில்லை", என்று
தலை நாணுகிறேன்...
***
"வெறும் பேச்சில் மட்டும்
'தமிழினம்' உணர்வு கொண்ட
தலைவர்களை சார்ந்து இருக்கிறோமே!", என்று
தலை நாணுகிறேன்...
***
"தூரம் நின்று
வருந்தி நிற்க இது
மாற்றான் வீட்டு
மரணம் அல்ல"
***
அடக்கம் செய்துவிட்டு
அடங்கி போக நாம்
'கோழைக் குடியில்'
பிறக்க வில்லை...
***
---------------------------------------------------------------
- சிவக்குமார் நேதாஜி
தயவு செய்து மரங்களை வாழவிடுங்கள்... இன்றேல் எதிர் காலத்தில் தென்றலின் அர்த்தத்தை அகராதியில் தேட வேண்டிஇருக்கும்....

14 ஏப்., 2009

அன்பிற்கினிய சித்திரை மகளே!

அன்பிற்கினிய சித்திரை மகளே!

'புத்தாண்டு' பதவி இழந்தாலும்
நீயே எங்கள் அரசாங்கத்தின் இளவரசி...


இந்தமுறையும்
நாடாள்வது யாரேனே நீயே
தீர்மானிக்க போகிறாய்...


நீ நெருப்புக்கூட்டுக்குள்
வாழும் சிட்டுக்குருவியா...


இல்லை சூரியனை
விழுங்கிவிட்ட பெருங்குருவியா?


நீ கடவுளின் அவதாரமா?
மரங்கள் எல்லாம்
மொட்டையடித்து
காணிக்கை தருகின்றன..


நீ மட்டும் தான்
வறட்சியில் பிறப்பெடுத்தாலும்
வளமாய் வாழ்ந்துக் கொண்டிருக்கிறாய்....


உன்னாலே
ஆடி தனிமையானது
துணையிழந்து...


மனமுவந்து
உன்னை வரவேற்கிறேன்!!
'இந்த முறையேனும்
செங்கோல் ஆட்சி அமைதிடுகுக'!!!


நண்பர்களே!!!!

கரம் சேருங்கள்....
இணைந்து வரவேற்ப்போம்...


சித்திரை மகளை!!!



அன்புடன்
சிவக்குமார் நேதாஜி

தயவு செய்து மரங்களை வாழவிடுங்கள்... இன்றேல் எதிர் காலத்தில் தென்றலின் அர்த்தத்தை அகராதியில் தேட வேண்டிஇருக்கும்....

2 ஏப்., 2009

உறங்கிக் கொண்டிருக்கின்றன..

"உனக்காக எழுதப்பட்ட
மடல்கள் இன்னும்
என் மின்னஞ்சல் பெட்டியில்
உறங்கிக் கொண்டிருக்கின்றன..

உன் ஒரு வார்த்தை
உயிர்க் கொடுக்குமென்று.. "


அன்புடன்
சிவக்குமார் நேதாஜி

தயவு செய்து மரங்களை வாழவிடுங்கள்... இன்றேல் எதிர் காலத்தில் தென்றலின் அர்த்தத்தை அகராதியில் தேட வேண்டிஇருக்கும்....