21 செப்., 2009

தூரத்தில் நீ...

உன்னுடன் இருந்தபோது
சூரியன்கூட சுடவில்லை....


இன்று...
நிலவுக்கூட சுடுகிறது...
தூரத்தில் நீ...


அன்புடன்,
சிவக்குமார் நேதாஜி
தயவு செய்து மரங்களை வாழவிடுங்கள்... இன்றேல் எதிர் காலத்தில் தென்றலின் அர்த்தத்தை அகராதியில் தேட வேண்டிஇருக்கும்....

2 செப்., 2009

தயங்குகிறது...

என் பேனாக் கூட
தயங்குகிறது...


உன்னை
என்னை
நம்மை
தொடக்க கால நட்பை
மகிழ்வாய் பதிவு செய்தது விட்டு


இன்று...

நம் பிரிவை
பதிவு செய்ய.......


- சிவக்குமார் நேதாஜி
தயவு செய்து மரங்களை வாழவிடுங்கள்... இன்றேல் எதிர் காலத்தில் தென்றலின் அர்த்தத்தை அகராதியில் தேட வேண்டிஇருக்கும்....


16 ஜூன், 2009

அறியாதவனாய்!!!


அவள் என்னில் பாதி என்று
சொல்லிக்கொண்டு இருக்கிறேன்
அவள் என்னை முழுதாய்
ஆக்கிரமித்தது அறியாதவனாய்!!!


- சிவக்குமார் நேதாஜி
தயவு செய்து மரங்களை வாழவிடுங்கள்... இன்றேல் எதிர் காலத்தில் தென்றலின் அர்த்தத்தை அகராதியில் தேட வேண்டிஇருக்கும்....

17 ஏப்., 2009

மாற்றான் வீட்டு மரணம் இல்லை

மின்னஞ்சலில் இலங்கை தமிழ் படுகொலை படங்கள்....
பார்ப்பதற்கு கொடுரமாய் இருந்தன....
------------------------------------------------------------------------
அந்த மின்னஞ்சல்
கோபத்துடன், என்னை
தலை நாண செய்தது...
----------
"என் உடன்பிறப்புக்கள்
உயிருக்கு போராட
நானோ சுகபோகம்
தேடி அலைகிறேனே!",என்று
தலை நாணுகிறேன்...
***
"சூடானது ரத்தம் மட்டும்தான்!?
ஆனால்
'செயலற்ற தசையானது
என் இதயம்!'", என்று
தலை நாணுகிறேன்
***
"இருதுளி கண்ணீர் தவிர
வேறுயேதும் செய்ய இயலாத
'சவமாய்' இருக்கிறேன்", என்று
தலை நாணுகிறேன்...
***
"உப்பிட்டு 'உண்ணுதல்'
ஏதும் என்னுள் எந்த மாற்றம்
தரவில்லை", என்று
தலை நாணுகிறேன்...
***
"வெறும் பேச்சில் மட்டும்
'தமிழினம்' உணர்வு கொண்ட
தலைவர்களை சார்ந்து இருக்கிறோமே!", என்று
தலை நாணுகிறேன்...
***
"தூரம் நின்று
வருந்தி நிற்க இது
மாற்றான் வீட்டு
மரணம் அல்ல"
***
அடக்கம் செய்துவிட்டு
அடங்கி போக நாம்
'கோழைக் குடியில்'
பிறக்க வில்லை...
***
---------------------------------------------------------------
- சிவக்குமார் நேதாஜி
தயவு செய்து மரங்களை வாழவிடுங்கள்... இன்றேல் எதிர் காலத்தில் தென்றலின் அர்த்தத்தை அகராதியில் தேட வேண்டிஇருக்கும்....

14 ஏப்., 2009

அன்பிற்கினிய சித்திரை மகளே!

அன்பிற்கினிய சித்திரை மகளே!

'புத்தாண்டு' பதவி இழந்தாலும்
நீயே எங்கள் அரசாங்கத்தின் இளவரசி...


இந்தமுறையும்
நாடாள்வது யாரேனே நீயே
தீர்மானிக்க போகிறாய்...


நீ நெருப்புக்கூட்டுக்குள்
வாழும் சிட்டுக்குருவியா...


இல்லை சூரியனை
விழுங்கிவிட்ட பெருங்குருவியா?


நீ கடவுளின் அவதாரமா?
மரங்கள் எல்லாம்
மொட்டையடித்து
காணிக்கை தருகின்றன..


நீ மட்டும் தான்
வறட்சியில் பிறப்பெடுத்தாலும்
வளமாய் வாழ்ந்துக் கொண்டிருக்கிறாய்....


உன்னாலே
ஆடி தனிமையானது
துணையிழந்து...


மனமுவந்து
உன்னை வரவேற்கிறேன்!!
'இந்த முறையேனும்
செங்கோல் ஆட்சி அமைதிடுகுக'!!!


நண்பர்களே!!!!

கரம் சேருங்கள்....
இணைந்து வரவேற்ப்போம்...


சித்திரை மகளை!!!



அன்புடன்
சிவக்குமார் நேதாஜி

தயவு செய்து மரங்களை வாழவிடுங்கள்... இன்றேல் எதிர் காலத்தில் தென்றலின் அர்த்தத்தை அகராதியில் தேட வேண்டிஇருக்கும்....

2 ஏப்., 2009

உறங்கிக் கொண்டிருக்கின்றன..

"உனக்காக எழுதப்பட்ட
மடல்கள் இன்னும்
என் மின்னஞ்சல் பெட்டியில்
உறங்கிக் கொண்டிருக்கின்றன..

உன் ஒரு வார்த்தை
உயிர்க் கொடுக்குமென்று.. "


அன்புடன்
சிவக்குமார் நேதாஜி

தயவு செய்து மரங்களை வாழவிடுங்கள்... இன்றேல் எதிர் காலத்தில் தென்றலின் அர்த்தத்தை அகராதியில் தேட வேண்டிஇருக்கும்....

31 மார்., 2009

முட்டாள் தினம்...

சிலரின் மௌனம் நம்மை முட்டாளாக்கும்...
சிலரின் பேச்சு நம்மை முட்டாளாக்கும்...
சில நேரம் சிரிப்பு கூட நம்மை முட்டாளாக்கும்...
பல நேரம் அழுகை கூட நம்மை முட்டாளாக்கும்.....
குழந்தையின் மழலை கூட நம்மை முட்டாளாக்கும்.....


" எப்படியோ எல்லோரும் இன்றைய தினத்தை
எதிர்பார்த்துதான் இருக்கிறோம்...
கொண்டாட அல்ல!"


"மற்றவர்களை முட்டாளாக்க..."

அன்புடன்
சிவக்குமார் நேதாஜி

தயவு செய்து மரங்களை வாழவிடுங்கள்... இன்றேல் எதிர் காலத்தில் தென்றலின் அர்த்தத்தை அகராதியில் தேட வேண்டிஇருக்கும்....

13 மார்., 2009

இதயம்

துடிக்கும் போது யாரும் கவனிக்கமாட்டார்கள்
நின்று விட்டால் பலரும் துடிப்பார்கள்

12 மார்., 2009

ஆனந்த கண்ணீர்

நான்
சிந்தும் கண்ணீர்
பலருக்கு
ஆனந்த கண்ணீர்
அன்புடன் பேனா

இவண்
பிரபாகரன் .சி

குடகு மலையால்

காலங்கள் பல கண்ட
காவிரியே - நீ
குடகு மலையில் பிறந்தாய்
கல்லைத்தான் முத்தமிட்டாய்
கரைந்து விட்டது...
பாறை போன்ற மலைகளை என்ன செய்தாய்
பாதையாக்கி கொண்டாய்
உன்னை தடுக்க
கல்லாலே அணை கட்டினோம்
கல்லணையில் -அனாலும்
கடலை அடைந்தாயே..
அரசியலையும் ஆட்டி வைத்தவளே...
ஆடி 18 அன்று காட்சிதந்தவளே...
அட உழவனின்
வயிறும், வயலும் வாடுது...
வந்து விடு வரும் வருடம்
எதிர்பார்ப்பேன்
வாடகை கலப்பையுடனும்
வறண்ட நிலத்துடனும்
இவண்
வறண்ட நிலத்தில் ஒருவன்
சி.பிரபாகரன் M.Com., M.Phil.,
MUTHIYAMPALAYAM, TRICHY


வாழவிடுங்கள்...

தயவு செய்து மரங்களை வாழவிடுங்கள்...
இன்றேல் எதிர் காலத்தில்
தென்றலின் அர்த்தத்தை
அகராதியில் தேட வேண்டிஇருக்கும்....

ஒரு தென்றலின் குரல்....

யாவரும் நலமாய் இருப்பீர்கள் என்றே எண்ணுகிறேன்...

உங்களோடு நான் இப்படி பேசி நாட்கள் பலவாகிறது....

நிச்சயம் என்னை மறந்து இருக்க மாட்டீர்கள்..

நான் உங்கள் நட்பின் உயிரால் மட்டுமே உலகில் உலா வருகிறேன்...

நான் உங்களோடு இருக்கும் போது உங்களுக்கு குளுமை தரா விட்டாலும் வெம்மை தராமல் இருந்துதிருந்தேன்...

என்னை நீங்கள் மறந்து இருக்க மாட்டீர்கள்..

ஏனென்றால் நான் உங்களுக்கு பிடித்த நண்பன் என்பது என் எண்ணம்...

இப்போதெல்லாம் நீங்கள் என்னை விட்டு வெகுதூரம் சென்று விடுகிறீர்கள்...

நான் நினைத்தாலும் உங்களை எட்ட முடியாத தூரம்...

நான் உங்களை பிரிந்து வாடுகிறேன் என்றால் அது எப்படி பொய்யாகும்...

இப்போதெல்லாம் நீங்கள் என்னை விட்டு வெகுதூரம் சென்று விடுகிறீர்கள்...

நான் உங்கள் அருகாமையில் இருக்க

மலைகளை கடக்க வேண்டாம்...

கடல்களை கடக்க வேண்டாம்...

சில மரங்களை கடந்தால் போதும்...

நீங்கள் என்னை அழைப்பது கூட எனக்கு கேட்கிறது....

நான் வருவதில்லை என்று புலம்புவது கூட என்னால் கேட்க முடிகிறது...

நான் ஆர்வமுடன் புறப்படுகிறேன்..

ஆனால் என் பயணம் ஏனோ தடைபடுகிறது....

நான் 'சோர்ந்து' விழுந்துவிடுகிறேன்...

எல்லோரும் என்னை திட்டி, சிலர் என்னையே மறந்தும் விடுகிறுறீர்கள்....

சிலர் மட்டும் என் காதில் சொல்லுகிறார்கள்...

" நான் வாடையாய் உருக்கொள்ள நீங்களும் காரணமாம்!"

25 பிப்., 2009

சொல்லுங்கள்

யாரவது அவளிடம்

சொல்லுங்கள்

'அவளுக்கு என்னை

பிடிக்கும்' என்று!!!

- சிவக்குமார் நேதாஜி

3 பிப்., 2009

மலர் தூவுகிறாய்....

கடிதம் கொடுத்தேன்

கசக்கி எறிந்தாய்...

அலைபேசியில் அழைத்தேன்

பேசாது தவிர்த்தாய்....

நேரில் சொன்னேன்

முறைத்து நகர்ந்தாய்...


ஏன்

இன்று என் கல்லறையில்

எழுதிய காதல் வரிகளுக்கு

மலர் தூவுகிறாய்???

- சிவக்குமார் நேதாஜி

29 ஜன., 2009

எனக்கு பிடித்த (பாதித்த) பாடல்கள் - 1

டும் டும் டும்
உன் பெயரை சொன்னாலே

உள் நாக்கில் தித்திக்குமே
போகாதே போகாதே
உன்னோடு சென்றாலே

வழி எல்லாம் பூ பூக்குமே
நீ எங்கே எங்கே ...

வாரணம் ஆயிரம்
நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை...
நில்லாமல் வீசிடும் பேரலை
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை
பொன் வண்ணம் சூடிய காரிகை
பெண்ணே நீ காஞ்சனை...

அயன்

விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய் பெண்ணே பெண்ணே
அடி இது போல் மழை காலம் என் வாழ்வில் வருமா
மழை கிளியே மழை கிளியே உன் கண்ணில் கண்டேனே
விழி வழியே விழி வழியே நான் என்னை கண்டனே, செந்தேனே...

1 ஜன., 2009

புத்தாண்டு

ஒரு வருடம் கொல்லும்
ஒரு மணித்துளியை
உலகமே கொண்டாடுகிறது....
அந்த மணித்துளியிலும்
உன் துளிக் குரல் கேட்க
துடிக்கிறது என் இதயம்....
-சிவக்குமார் நேதாஜி