26 மே, 2010

நட்பும் ஒரு பிறப்புதான்....

என் இனிய நண்பனே..
நம் நட்பும் ஒரு பிறப்புதான்....

நம் அறிமுகம்தான்
நட்புக் குழந்தையின் பிரசவம்.

புன்னகை இடம் மாறி
வார்த்தைகள் தடுமாறி...
மழலை பேசும்
தவழ்ந்த குழந்தை...

அக்கறையும்
ஆராயவும் நிறைந்த நம்மை பற்றி
நாம் படித்த
அரிச்சுவடி சிறுவனானது நம் நட்பு..

உணவிலிருந்து
நம் உணர்வு வரை
பகிர்ந்திட்ட
நேசப்பள்ளியின் மாணவனாய்
தேர்ச்சி பெற்றது நம் நட்பு..

உன்னில்
என்னை பிரித்தறியா
அந்த அரும்பு மீசைக் காலம்
நட்பின் அரியதொரு காலம்...

முறைப்புகளும்
முரண்பாடுகளும் நிறைந்த
முறுக்குக் மீசை நட்புக்காலம்
முறுக்கானது...
கொஞ்சம் செருக்கனாதும் கூட ...

உரிமையாய் உன்னோடு
சண்டையிட்டு,
உன் விழிக்குள் சட்டென்று வந்திடும்
அந்த நட்பின் இளமைப் பருவம்
என்றும் அழியா தலைமைப் பருவம்..

பிறந்த நாள் கொண்டாடுகிறோம்...
நீ முதிர்ந்து விட்டாய்
என்பதற்காக மட்டுமல்ல..
நம் நட்பு இன்னும் இளமையாகிறது
என்று உணர்த்தவும்..

நாளாக நாளாக இளமையாவது
நட்பு மட்டும் தான்...
நண்பா நீ அல்லவே..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக