30 டிச., 2008

கவலை...

சாலையில் சண்டையிட்டு கொள்கிறார்கள்
கவலைப்பட்டார் கடைக்காரர்
'தன் வியாபாரம் கெடுகிறதே' என்று....

25 டிச., 2008

முழுதமிழனாக...

அரசு அலுவலகங்கள் முதல்
எங்கும் தமிழே பெயர் பலகை!

கண்ணில் படுவதெல்லாம்
கன்னித் தமிழ்ச் சொற்கள்!

செவி மடுப்பதெல்லாம்
செந்தமிழ்ச் சொற்கள்!

நீதிமன்றத்தில்
தமிழில் வழக்காடல்!

சட்டமன்றத்தில் தமிழில்
ஆளுனர் உரை!

பல்கலைக்கழகத்தில்
தமிழிலேயே பாடத்திட்டம்!

திரைபடங்களில்
தீந்தமிழ் உரையாடல்கள்!

இப்படி முழுதமிழனாக
வாழ்ந்து வந்தேன்!

நான் செய்ய வேண்டிய பணிகள்
அடங்கிய ஆங்கில கோப்புகளில்
தலை சாய்த்து கண்ணயர்ந்தவாறு!
- சிவக்குமார் நேதாஜி


நான் அழும்போது...

தந்தை - அழாதே!

என்று அதட்டுவதற்கு!

தாய் - அழாதே!

என்று அரவணைப்பதற்கு!

மனைவி சேர்ந்து

அழுவதற்கு!

பிள்ளைகள் அழுவதை

பார்த்து சிரிப்பதற்கு!

உறவுகள் - பொய்யாய்

கண்ணில் கண்ணீர் காட்டுவதற்கு!

நண்பர்கள் - காரணம் கண்டு

கண்ணீர் துடைப்பதற்கு!


- சிவக்குமார் நேதாஜி

23 டிச., 2008

பாடமாக வையுங்கள்...

தயவு செய்து
பாடமாக வையுங்கள்...

எல்லா பாட புத்தகங்களில்
இருந்த போதும்
ஆசிரியர் போதிக்காத பாடம்!

பட்டம் பெற்றவரும்
தட்டு தடுமாறும் பாடம்!

திரையரங்குகளில் ஒலித்த போதும்
கேட்க தவறிய பாடம்!

கூட்டத்தோடு
'கோவிந்தா' போட்ட பாடம்!

ஒலிநாடா உருகொண்டாலும்
கேட்க விரும்பாத பாடம்!

கட்டாய மனப்பாடமாக
வையுங்கள்!

அப்படியேனும் படிக்கின்றோம்
நமது தேசிய கீதத்தை!

18 டிச., 2008

ஒரு பெண்ணின் குரல்...

காதை திருகுகின்றேன்...
கன்னத்தை கிள்ளுகின்றேன்....

மடி சாயும்போது
தலை கோதுகின்றேன்...

அதிகம் பேசும்போது
தலையில் கொட்டுகின்றேன்...

சில நேரம் ரகசியமாய்
ஏதேதோ கிசுகிசுக்கின்றேன்
உன் காதில்...

பலமுறை உன்னை
'வாடா போடா' உரிமையாய்
அழைக்கின்றேன்....

ஆனால் நேரில் பார்க்கும் போது
மட்டும் தலை நாணி புன்னகைக்கின்றேன்
எனக்குள்ளே....

காரணம் என்ன?

பேசும் போதே அவனுடன்
எவ்விதமான பந்தம் என்பதை
முடிவு செய்துவிடுபவர்கள் பெண்கள்...

கடைசி வரை அவள் தனக்கு
என்ன பந்தம் என்று தெரியாமல்
துடிப்பவர்கள் ஆண்கள்....

காரணம் என்ன?நேரம் கிடைக்கும் போது பதிலளியுங்கள்

17 டிச., 2008

ஒரு தகவல் - ஒருவனின் ஆதங்க குரல்

உன் குறுந்தகவல் கூட
கொல்லுதே...
ஒரு தகவல் சொல்லாயோ
என் உயிரனைவது
நீதான் என்று!

தலை குனிந்து...

தலை நிமிர்ந்து
கேட்டான் பிச்சை!

தலை குனிந்து
நான் சென்றேன்
-சிவக்குமார் நேதாஜி

16 டிச., 2008

நான் ரசித்த கவிதை

நான்
பலநாட்கள் தாயிடம்
சிறை பட்டு………….

பின்
பட்டாம்பூச்சியின் காலில்
அகப்பட்டு………..

மண் சேர்ந்து…. நீர் பெற்று…
செடியாகி …
ரோஜா என உருவெடுத்தால் ………

நீ …ஒற்றை நிமிடத்தில் ……
என்னை கொன்று ….
எவளிடமோ நீட்ட ……

உன் காதலுக்கு நான் என்ன …
அடையாள அட்டையா………?